பாராசூட்டுடன் சைக்கிளில் பறந்து ஆஸ்திரிய வீரர் உலக சாதனை!

World record by combining cycling and parachuting
சைக்கிளிங், பாராசூட்டிங் இரண்டையும் இணைத்து உலக சாதனை
Published on

ஆஸ்திரியாவைச் சேர்ந்த சாகச விளையாட்டு வீரரான எலியாஸ் ஸ்வார்ஸ்லர் சைக்கிளிங், பாராசூட்டிங் இரண்டையும் இணைத்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

முதலில் 1000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் பாராசூட் மீது எலியாஸ் சைக்கிளிங் செய்தார்.

பின்னர், பாராசூட் திறக்கப்பட்ட நிலையில், காற்றில் பறந்தபடியே சைக்கிளை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

வானில் குறிப்பிட்ட நேரம்வரை சைக்கிளுடன் நிலையாகப் பறந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கி தனது சாதனையை நிறைவு செய்தார்.

உடலின் சமநிலை, காற்றின் வேகம், பாராசூட்டின் கட்டுப்பாடு, சைக்கிளின் எடை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால், இந்த முயற்சிக்கு பல மாதங்கள் சிறப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எலியாஸ் ஸ்வார்ஸ்லர் ஏற்கெனவே அதிவேக சைக்கிள் ஓட்டுதலுக்காக உலக அளவில் அறியப்பட்டவர். தற்போது சைக்கிளிங், பாராசூட்டிங் ஆகிய இரண்டு விளையாட்டுகளையும் இணைத்து இந்தப் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இவரின் சாகச வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com