
ஸ்பேஸ் எக்ஸ் என்னும் அவருடைய நிறுவனத்தை பொதுப்பங்கு வெளியீட்டில் கொண்டுவந்துள்ளதன் விளைவாக உலகின் முதல் டிரில்லியனர் ஆகிறார் எலான் மஸ்க்.
பொதுப்பங்கு வெளியீடு என்பது ஒரு தனியார் நிறுவனம் தன் தொழிலை விரிவுபடுத்துவதற்காகவோஅல்லது நிதி திரட்டுவதற்காகவோ, தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாகப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வெளியிடுவதே ஆகும்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், விண்வெளி சார்ந்த செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு மூலதனம் தேவைப்படுவதாலும் இந்நிறுவனத்தை பொதுப்பங்கு வெளியீட்டிற்குக் கொண்டுவந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பொதுப்பங்கு வெளியீட்டில் ஒரு பங்கை 135 டாலர் என விலை நிர்ணயம் செய்து, 75 டாலர் பில்லியனைத் திரட்டியுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் மதிப்பு ஏறத்தாழ 1.77 டாலர் டிரில்லியனாக உயர்ந்துள்ளது.
இதுவரை உலகில் எந்த மனிதரும் எட்டாத ஒரு உயரத்தை இவர் எட்டியுள்ளார்.
ஒரு தனிநபரின் நிகர மதிப்பு பெரும்பாலான நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியை விட அதிகம் என்பது உலகில் உள்ள பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.