எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எலான் மஸ்க் ஒரு வாரத்திற்கு ஆம்லேட் சாப்பிடமாட்டாராம்... உச்ச கட்ட நக்கல்!

‘ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன்’ என தன் ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் மீதான விமர்சனத்துக்கு எலான் மஸ்க் கேலியும் கிண்டலுமாகப் பதிலளித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில், அந்த நிறுவனம் உருவாக்கிய ராக்கெட், சோதனையின்போது தானாகவே விண்ணில் பாய்ந்து, சில நொடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

மத்திய சீனாவில் உள்ள கோங்கி மலைப் பகுதியில், ராக்கெட் விழுந்து நொறுங்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்திருந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “தியான்லாங்-3 ராக்கெட்டை நிலையாகப் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கட்டமைப்பு கோளாறு காரணமாக அந்த ராக்கெட் எதிர்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. எனினும், அது மக்கள் வசிக்காத மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதால் யாரும் காயமடையவில்லை.” என்று கூறியிருந்தது.

மைக் பெஸ்கா பதிவு
மைக் பெஸ்கா பதிவு

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை பத்திரிகையாளர் மைக் பெஸ்கா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார். அதில் நியூயார்க் டைம்ஸில் முதல் பக்கத்தில் மூன்று முக்கிய செய்திகள் இடம்பெறும். மூன்றாவது முக்கிய செய்தி பிரான்சில் தேர்தல் முடிவுகள் யாரும் கணித்திராத வகையில் அமைந்தது பற்றியது.இரண்டாவது முக்கிய செய்தி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிடனை விலகச் செய்ய மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவர் விலகுவது பற்றிய செய்தி. ஆனால் முதல் முக்கிய செய்தி என்ன தெரியுமா? எலான் மஸ்கின் விண்கலம் ஏவப்பட்டபோது ஒன்பது பறவை கூடுகளை அழிந்துள்ளன என்பது என அப்பத்திரிக்கையை நக்கல் செய்துள்ளார்.

ஏற்கெனவே நக்கல் ஆசாமியான எலான் மஸ்க் சும்மா இருப்பாரா?

“இந்த கொடூர குற்றச்சாட்டுக்கு பரிகாரமாக ஒரு வாரத்திற்கு ஆம்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்கப் போகிறேன்” என படுகிண்டலாகப் பதிலளித்துள்ளார்.

மிஸ்டர் மஸ்க், ரொம்ப ஓவரா போறீங்க..

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com