15 கோல்களைத் தடுத்து குட்டித் தீவின் வீரர் சாதனை!

எலாய் ரூம், ஆட்டநாயகன் விருதுடன்
எலாய் ரூம், ஆட்டநாயகன் விருதுடன்
Published on

க்யூராகோ... கரிபீயன் தீவுகளில் ஒன்று. நெதர்லாந்தின் காலனியாக இருந்து சுயாட்சி பெற்ற நாடான இதன் கால்பந்து அணி, இந்த உலகக் கோப்பையின் பத்தாம் நாள் ஈக்வடாரை எதிர்த்து ஆடியது. அந்த அணி உலகக் கோப்பைக்குத் தகுதிபெறுவதே இதுதான் முதல்முறை. ஆச்சர்யகரமாக அந்தப் போட்டியை 0-0 என டிரா செய்தது. க்யூராகோவின் கோல்கீப்பர் எலாய் ரூம், 15 முறை கோல் விழாமல் திறமையாகத் தடுத்தார். 12 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கோல்கீப்பர் இதுபோல் 15 முறை கோல் விழாமல் தடுத்துள்ளார். அந்த சாதனையை இவர் சமன் செய்ததாக பரபரப்பாக ரசிகர்கள் வாயைப் பிளந்தனர். இந்த டிராவின் மூலம் உலகக் கோப்பையில் ஒரு புள்ளியைப் பெற்றதை க்யூரகோவினர் கொண்டாடினர். நெதர்லாந்து அரசர் எலிம் அலெக்சாண்டர், தன் ராணியுடன் கியூரகோ அணியின் லாக்கர் ரூமுக்கே சென்று ஆடிக் கொண்டாடினார்.

இன்னொரு போட்டியில் ஜெர்மனி, ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என வென்றது. துனிசியாவை ஜப்பான் 4-0 என தோற்கடித்தது.

முன்னதாக நெதர்லாந்து அணி ஸ்வீடனை 5-1 என வீழ்த்தியது. இதைப் பார்த்துவிட்டுதான கியூரகோ ஆட்டத்தைப் பார்க்க வந்து ஆட்டம் போட்டார் நெதர்லாந்து அரசர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com