ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி தந்த ஈக்வடார் ; முதல் முறையாக நாக் - அவுட் சுற்றில் ஐவரி கோஸ்ட் அணி!

Eucador team won the match against germany
ஜெர்மனியை வீழ்த்திய உற்சாகத்தில் ஈக்வடார் அணி.
Published on

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் குரூப் ‘இ’ பிரிவில் உள்ள குராகாவோ - ஐவரி கோஸ்ட் அணிகள்  மோதின.

இதில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் குராகாவோ அணியை ஐவரி கோஸ்ட் அணி வீழ்த்திப் போட்டியை வென்றது. இதனால் முதல் முறையாக நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறும் தகுதியை ஐவரி கோஸ்ட் அணி பெற்றுள்ளது.

அடுத்ததாக குரூப் ‘இ’ பிரிவில் உள்ள ஈக்வடார், ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஈக்வடார்  அணி வீழ்த்தி போட்டியை வென்றது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தன. போட்டியின் இரண்டாம் பாதியில் ஈக்வடார் அணி ஒரு கோல் அடித்து தன் அணியை முன்னுக்குத் தள்ளியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஈக்வடார். ஜெர்மனி ஏற்கெனவெ இப்பிரிவில் முதலிடம் வகிப்பதால் அதற்குப் பிரச்னை இல்லை. ஆனால் இந்த தோல்வி பெரும் அதிர்ச்சிதான்.

குரூப் ‘எப்’ பிரிவுகளுக்கு இடையேயான அணிகளில் துனிசியா, நெதர்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் முடிவில் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றியைத் தட்டிச் சென்றது.

ஜப்பான் - சுவீடன், பாராகுவே – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் டிராவில் முடிந்தன.

குரூப் ‘டி’ பிரிவில் உள்ள அமெரிக்கா, துருக்கி அணிகள் மோதின.

இதில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் துருக்கி அணி, அமெரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com