92ஆவது நிமிடத்தில் கோல் அடித்து வரலாறு படைத்த கனடா அணி!

canada team won the match
கனடா அணி
Published on: 

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நாக்அவுட் சுற்றின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.

போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் கனடா அணி வீழ்த்தியது. இதனையடுத்து, கனடா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் இறுதி நேரம் வரை இரு அணிகளும் கோல் அடிக்க போராடியும், ஒரு கோல் கூட அடிக்கவில்லை. கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில்,  போட்டியின் 92ஆவது நிமிடத்தில் கனடா அணியின் ஸ்டீபன் யூஸ்டாகியோ கோல் அடித்து கனடாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இந்த வெற்றியால் கனடா அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியதுடன், அடுத்த சுற்றில் நெதர்லாந்து அல்லது மொராக்கோ அணியை எதிர்கொள்ளும். தென் ஆப்பிரிக்கா அணியின் உலகக் கோப்பை பயணம் இந்தப் போட்டியுடன் நிறைவடைந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com