உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று நிறைவடைய உள்ள நிலையில் பல ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருமுறை சாம்பியனாக வலம்வந்த உருகுவே அணியை ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
இதனால், அந்த குரூப்பில் இருந்த கேப் வெர்டே அணி தனது வரலாற்றிலேயே முதல் முறையாக ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே ஸ்பெயினுடன் 0-0, உருகுவேயுடன் 2-2 என டிரா செய்து, கடைசியாக சவுதி அரேபியாவுடன் 0-0 என டிரா செய்தது. தோல்வியே காணாமல் அடுத்த சுற்றுக்குள் நுழையும் கேப்வெர்டே அடுத்த போட்டி யாருடன் தெரியுமா? அர்ஜெண்டினா.
மேலும், ஈரானுடன் எகிப்து அணி மோதியதில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதனால், எகிப்து அணி முதல் முறையாக நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.