'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ, அமெரிக்கா அணிகள்!

mexico team
மெக்சிகோ அணி
Published on

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நேற்று குரூப் 'ஏ' பிரிவு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மெக்சிகோ, தென்கொரியா அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் நிறைவடைந்தது.

இரண்டாம் பாதியில் மெக்சிகோ அணி கோல் அடித்தது. மெக்சிகோ அணி முன்னிலை வகித்த நிலையில், தென்கொரியா அணியால் இரண்டாம் பாதியிலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 1-0 என்ற புள்ளிக் கணக்கில் மெக்சிகோ அணி போட்டியை வென்றது.

மெக்சிகோ அணி குரூப் 'ஏ' பிரிவு அணிகளில் முதல் அணியாக 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அடுத்ததாக இங்கிலாந்து, குரேஷியா அணிகள் மோதின. இதில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் 2 கோல்களை அடித்தார். பெனால்டி வாய்ப்பில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ஹாரி கேன் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இந்தப் போட்டியை வென்றது.

அடுத்ததாக குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ் தவறுதலாக 'செல்ஃப் கோல்' அடித்தார். இதனால், அமெரிக்க அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில், அமெரிக்கா அணி மற்றொரு கோல் அடித்தது.

இரண்டாம் பாதியில், ஆஸ்திரேலியா அணி கோல் அடிக்க போராடியும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை.

இதனால், 2-0 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை வென்ற அமெரிக்கா அணி, குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளில் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்ததாக குரூப் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து,மொராக்கோ அணிகள் இடையிலான போட்டி போஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டி தொடங்கிய 71- வது நொடியிலேயே மொராக்கோ அணி தனது முதல் கோலை அடித்தது. இந்த கோப்பையின் அதிவேக கோல் இதுவரை இதுதான்! போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை.

இதனால், போட்டியின் முடிவில் ஸ்காட்லாந்து அணியை 1-0 என வீழ்த்தி, மொராக்கோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அடுத்ததாக, குரூப் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில், ஹைதி அணிகள் மோதின. இதில், பிரேசில் அணியின் மதேயுஸ் குன்ஹா இரட்டை கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் மற்றொரு கோலை பதிவுசெய்த பிரேசில் அணி 3-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், போட்டியின் முடிவில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் பிரேசில் அணி, ஹைதி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com