கால்பந்து உலகக்கோப்பை 2026: வெற்றியுடன் தொடங்கிய மெக்சிகோ, தென்கொரியா அணிகள்!

பிஃபா 2026
பிஃபா 2026
Published on

நேற்று தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் மெக்சிகோ, தென்கொரியா அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளன.

முதல் போட்டியில் மெக்சிகோ-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில், தொடக்கம் முதலே மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தென்ஆப்பிரிக்கா அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

மெக்சிகோ அணியின் ஜூலியன் குவினோன்ஸ், ரவுல் ஜிமெனெஸ் ஆகியோரின் கோல்களால் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி தன் முதல் வெற்றியை இந்த உலகக்கோப்பை 2026இல் மெக்சிகோ அணி பதிவு செய்துள்ளது.

இன்று காலை இரண்டாவது லீக் போட்டி தென்கொரியா - செக் குடியரசு இடையே நடைபெற்றது. முதல் பாதியின் முடிவில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால், இரண்டாம் பாதி ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இரண்டாம் ஆட்டத்தில் செக் குடியரசின் லாடிஸ்லாவ் க்ரெஜ்ஸி ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆட்டம் சூடுபிடித்த நிலையில் தென் கொரியாவின் ஹ்வாங் இன்போம் முதல் கோல் அடித்து இந்த ஆட்டத்தை சமன் செய்தார்.

அதைத் தொடர்ந்து தென்கொரிய வீரர் ஓ ஹியான் கியூ, ஆட்டத்தின் 80 வது நிமிடத்தில் கோல் கணக்கை 2 ஆக உயர்த்தினார். 

கடைசிவரை தென்கொரியா அணி, செக் குடியரசை கோல் அடிக்க விடாமல் தடுத்து வந்த நிலையில், இப்போட்டியில் தென்கொரியா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் மெக்சிகோ, தென் கொரியா அணிகள் தங்கள் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com