கை விட்டல்
கை விட்டல்

சிறுத்தைப்புலி தாக்கி உயிர்தப்பிய ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்!

சிறுத்தைப்புலி தாக்கியதில் நல்வாய்ப்பாக உயிர்தப்பியிருக்கிறார், ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் கை விட்டல்.

ஏற்கெனவே படுக்கை அறையில் முதலையிடமிருந்து தப்பிய இவர், இரண்டாவது முறையாகவும் பத்திரமாக இருக்கிறார். 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக 1993ஆம்ஆண்டு முதல் 2003வரை, 147 ஒரு நாள் போட்டிகளிலும் 46 டெஸ்ட் போட்டிகளிலும் கை விளையாடியுள்ளார். பின்னர் குடும்பத்தினருடன் இணைந்து தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஹுமானி எனும் இடத்தில் வனவிலங்குகளைப் பார்வையிடச் சுற்றிக்காட்டும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

கடந்த வாரம் இப்படி ஒரு வாகனப் பயணத்தில் சிறுத்தைப் புலி ஒன்றைப் பின் தொடர்ந்துபோன போது, அது இவரைத் திடீரெனத் தாக்கிவிட்டது. அதில் கை விட்டலின் கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டதுடன், தலையில் ஆழமான வெட்டுக் காயம் போல ஆகி, அதிகமான ரத்தம் வெளியேறியுள்ளது. 

நல்ல வேளையாக உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் அங்கிருந்து வான்வழியாக ஹராரே நகர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அவர் நலமுடன் இருப்பதாக அவரின் மனைவி ஹன்னா தெரிவித்துள்ளார். 

கடந்த 2013ஆம் ஆண்டிலும் இதைப்போலவே பொழுதுபோக்கு மையம் ஒன்றில் தங்கியிருந்தபோது, கை விட்டலின் படுக்கையறையில் முதலை ஒன்று சரியாக அவரின் படுக்கைக்குக் கீழே புகுந்துகொண்டிருந்தது. பணியாளர் பெண் அதைப் பார்த்து அலற, அப்போதும் கை உயிர் தப்பியிருந்தார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com