245 கோடி டாலரில் காசா மறுசீரமைப்புத் திட்டம் - அமைதி வாரியம் அறிவிப்பு!

Gaza rebuilding plan at Rs.245 crore dollar
காஸாவை மறுசீரமைக்க திட்டம்
Published on

போரினால் சிதைந்த காசாவை மீண்டும் கட்டமைக்க 245 கோடி டாலர் மதிப்பிலான செயல் திட்டத்தை அமைதி வாரியம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபர் வகுத்த போர்நிறுத்தத் திட்டத்தில் காசாவை மறுசீரமைக்க அமைதி வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆனால், காசாவின் 60% பகுதிகளை இஸ்ரேல் இன்னும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதனால், காசாவில் இருக்கும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்கு இடையிலும், கூடாரங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், காசாவைக் கட்டமைக்க 245 கோடி டாலரும், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களை முழுமையாகச் சீரமைக்க 352 கோடி டாலரும், அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 714 கோடி டாலரும் தேவைப்படும் என்று அமைதி வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலமாக, காசாவில் வாழும் பாலஸ்தீனர்களும், இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் இருப்பவர்களும் பல ஆண்டுகளாக அனுபவித்த போர் அச்சத்திலிருந்து வெளியேறி, அவர்களின் வாழ்க்கையின் தரம் மேம்பட வழிகிடைக்கும் என்று காசாவுக்கான தூதர் நிக்கோலே குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com