காசாவின் ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்! நெதான்யாகு அறிவிப்பு

Mohammad sinwar
முகமது சின்வார்
Published on

ஹமாஸ் அமைப்பின் முக்கிய ராணுவ தலைவர்களில் ஒருவரான முகமது சின்வார் காசாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெதன்யாகு புதன் அன்று அறிவித்துள்ளார்.

முகமது சின்வார் யார்?

கான் யூனோஸ் என்ற அகதிகள் முகாமில் 1975 ஆம் ஆண்டு முகமது சின்வார் பிறந்துள்ளார். 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களில் அவரது குடும்பமும் ஒன்று. அவரது மூத்த சகோதரர் யஹ்யாவைப் போலவே முகமது சின்வாரும் 1980களின் பிற்பகுதியில் ஹமாசஸில் இணைந்தார். அவர் காஸ் சாம் பிரிகேட்ஸ் என்ற ராணுவ பிரிவின் உறுப்பினராகவும் இருந்தார். கடந்த ஆண்டு கொல்லப்பட்ட காஸ் சாம் பிரிகேட்ஸ்  பிரிவின் நீண்ட கால தளபதியான டெய்ஃபுக்கு நெருக்கமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ராணுவ தளம் ஒன்றின் மீதான தாக்குதல் 2006 ஆம் ஆண்டு நடந்த போது அதை திட்டமிட்டவர்களில் இவரும் ஒருவர். அந்த தாக்குதலில் போராளிகள் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து வைத்தனர். பின்னர் இவரது மூத்த சகோதரர் யஹியா சின்வார் உட்பட்ட 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக அவரை விடுதலை செய்தனர்.

2023 காசா பகுதியில் ஒரு ஓட்டுநருக்கு அருகில் தாடி வைத்த முகமது சின்வார் அமர்ந்திருக்கும் ஒரு வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டது.

உயிருடன் இருந்த முக்கிய தளபதிகளில் ஒருவராக சின்வார் இருந்தார். போரில் கொல்லப்பட்ட மற்ற ஹமாஸ் உறுப்பினர்களை பட்டியலிடும்போது , இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் சின்வார் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது, “(முகமது) டெய்ஃப், (இஸ்மாயில்) ஹனியே, யஹ்யா சின்வார் , முகமது சின்வார் ஆகியோரைக் கொன்றோம்”.

 நடந்தது என்ன…

 மே 13 அன்று கான் யூனிஸில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் கூட்டு மையம் இருந்ததாகவும், அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் முகமது சின்வார் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் ஹமாஸ் அமைப்பினர் அவரது இறப்பு தொடர்பான அதிகார பூர்வ செய்தி எதையும் வெளியிடவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com