உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல்: அண்ணா பல்கலைக்கு என்ன இடம்?

ஐஐடி மெட்ராஸ்
ஐஐடி மெட்ராஸ்
Published on

நடப்பாண்டில் உலகில் சிறப்பாக இயங்கும் பல்கலைக் கழகங்களின் பட்டியலை பிரிட்டன் ஆய்வு நிறுவனமான க்யூ.எஸ் வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில், இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

கடந்த வருடம் 123ஆவது இடத்தில் இருந்த ஐஐடி டெல்லி, நடப்பாண்டில் 118ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதைத்தொடர்ந்து ஐஐடி பாம்பே134ஆவது இடத்தையும், ஐஐடி மெட்ராஸ் 170வது இடத்தையும் பிடித்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவில் 11ஆவது இடத்தையும், உலகத் தரவரிசைப் பட்டியலில் 470ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

உலக அளவில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்ஐடி) தொடர்ந்து 15வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும், நான்காவது இடத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஐந்தாவது இடத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் உள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியல், கல்வியின் தரம், மாணவர்கள் வெளியீடும் ஆராய்ச்சி கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களைஅடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com