வெனிசுலாவில் தொடங்கியது இந்திய மருத்துவ உதவி!

'Operation Amistad'
'ஆபரேஷன் அமிஸ்டாட்'
Published on

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், 'ஆபரேஷன் அமிஸ்டாட்' திட்டத்தின் கீழ் கள மருத்துவமனைகளை வெனிசுலாவில் இந்திய ராணுவம் அமைத்துள்ளது.

இந்த மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணிநேரமும் இலவச சிகிச்சையை வழங்கும்.

வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.2, 7.5 ஆகப் பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அதில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள அந்நாட்டிற்கு இந்தியா உதவி வருகிறது.

இந்தியா தொடங்கிய 'ஆபரேஷன் அமிஸ்டாட்' திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் 66 டன் நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்குக் கொண்டுசென்றன.

"இந்த இரண்டு விமானங்களும் புது தில்லியிலிருந்து கராகஸ் வரை 14,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை 23 மணி நேரத்தில் கடந்தன. இந்தக் கடினமான காலகட்டத்தில் இந்தியா, வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவாக உதவிக்கரம் நீட்டும்." என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த உதவித் தொகுப்பில் இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை, 35 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், அத்துடன் அவசர மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு நடமாடும் மருத்துவமனைகள் ஆகியவை அடங்கும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com