நரேந்திர மோடி - லுலா டா சில்வா
நரேந்திர மோடி - லுலா டா சில்வா

ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தது இந்தியா!

அடுத்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவிடமிருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த டிசம்பர் மாதம் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜி20 உச்சி மாநாடு நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெற்றது. இதில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், உலகளாவிய கடன் பாதிப்புகள் தொடர்பான பிரகடனத்தை இந்தக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற உள்ளது.

இந்தியாவிடமிருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா கூறுகையில், பிரேசிலின் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது.

1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான போராட்டம். 2. ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி. 3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவையாகும்.

'நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்தலே' பிரேசில் தலைமையிலான ஜி20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும்” என்றார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரேசில் அர்ப்பணிப்புடனும் தொலைநோக்கு பார்வையுடனும் வழிநடத்தும்.மேலும் உலகளாவிய ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றை இன்னும் மேம்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

பிரேசிலில் நடக்க இருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டின் போது, இந்தியா அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com