முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டன!

Microsoft
மைக்ரோசாப்ட்
Published on: 

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள் சரிசெய்யப்பட்டு, இன்று மீண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இந்தியா உட்பட 74 நாடுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அலுவலகங்களுக்கான தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் அவுட்லுக், ஊழியர்கள் - வாடிக்கையாளர்கள் இடையேயான நேரடி உரையாடல், காணொலி, ஆய்வுக் கூட்டங்கள், குரல் அழைப்புகள் ஆகியவற்றுக்கு உதவும் மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஏ.ஐ. சேவைகளை வழங்கும் கோபைலட் உட்பட்ட பல்வேறு சேவைகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் முடங்கின. இதனால், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் அன்றாட சேவைகள் தடைபட்டன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட அதிகப்படியான சுமை, தானியங்கி சோதனைகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே இந்த உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்ட்டதாகவும், வேறு எந்தவிதமான சைபர் தாக்குதல்களாலும் இந்த முடக்கம் நடைபெறவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து, இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று மைக்ரோசாப்ட் சேவைகள் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram