பாம்பு பீட்சா அறிமுகம்!
பாம்பு பீட்சா அறிமுகம்!அந்திமழை

பாம்பு பீட்சா அறிமுகம்!

ஹாங்காங்கில் உள்ள பீட்சா ஹட் நிறுவனம் செர் வோங் என்ற நிறுவனத்துடன் இணைத்து பாம்பு பீட்சாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

பீட்சாவில் அவரவர் விருப்பப்படி டாப்பிங்ஸ் எனும் சேர்மானப் பொருட்களைச் சேர்ப்பார்கள். சிலர் காய்கறிகளைச் சேர்ப்பார்கள். இன்னும் சிலர் சிக்கன் அல்லது வெண்ணெயைச் சேர்ப்பார்கள். ஆனால், ஹாங்காங்கில் உள்ள பீட்சா ஹட் நிறுவனமும் செர் வோங் என்ற நிறுவனமும் இணைந்து புதிய டாப்பிங்கை அதாவது பாம்பு பீட்சாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பீட்சாவில், பாம்பு இறைச்சி, கருப்பு காளான்கள், உலர்ந்த கறித்துண்டங்கள் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் 22ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங், தெற்கு சீனாவின் குளிர் மாதங்களில் பாம்புக் குழம்பு மிகவும் பிரபலம். இதைப்போல, சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் பாம்பு உணவும் முக்கியமானதாக இடம்பிடித்துள்ளது. பாம்பை உண்பதன் மூலம் தோல்சார்ந்த பிரச்னைகள் தீர்வதாக அந்த நாட்டு மக்கள் நம்புகின்றனர். இந்தப் பின்னணியில் பீட்சாவிலும் பாம்பு வகையறாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com