ஐசிசி டி20 தரவரிசை... உலகின் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ள இஷான் கிஷன்!

Ishan Kishan
இஷான் கிஷன்
Published on

இந்திய அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் ஐசிசி ஆண்கள் டி20 பேட்டிங் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்த சக இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இருவருக்கும் இடையே வெறும் 7 ரேட்டிங் புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

icc t20 ranking
ஐசிசி ஆண்கள் டி20 பேட்டிங் தரவரிசையில் இஷான் கிஷன் முதலிடம்

நடப்பு ஆண்டு 2026 டி20 உலகக் கோப்பையில் இஷான் கிஷன் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம்தான் இதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிரடி பேட்டிங்கால், 146 ஸ்டிரைக் ரேட்டில் 317 ரன்களை இஷான் கிஷன் குவித்தார்.

இதற்கு முன்னர் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இதன் மூலம்  ஐசிசி ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை எட்டிய நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com