அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்தார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு அதிபர் பைடன் உள்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1977 முதல் 1981 வரை ஜிம்மி கார்டர் அமெரிக்க அதிபராக இருந்தார். அமெரிக்காவின் 39ஆவது அதிபராக இவர் பதவி வகித்தார். விவசாய பின்னணி கொண்ட இவர் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு கிடைத்த மக்கள் அபிமானத்தால் ஜார்ஜியா மாகாண ஆளுநர் தொடங்கி அமெரிக்க அதிபர் வரை உயர்ந்தார். கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி அவரது 100ஆவது பிறந்தநாள் குடும்பத்தினர், நண்பர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் அவர் வயது மூப்பு தொடர்பான உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் மறைக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிய பல தசாப்தங்களாக போராடியவர் ஜிம்மி கார்டர். மனித உரிமைகளைப் பேண, பொருளாதார, சமூக வளர்ச்சியை மேம்படுத்த அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதனை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.