200ஆவது போட்டி - ஹாட்ரிக் சாதனை புரிந்த மெஸ்ஸி!

Lionel messi recorded hat-rick goal
ஹாட்ரிக் சாதனை படைத்தார் லயோனல் மெஸ்சி.
Published on

நடப்பு உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார் மெஸ்ஸி.

குரூப் 'ஜெ' பிரிவு அணிகளுக்கான போட்டியில் அர்ஜென்டினா, அல்ஜீரியா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணியின் சார்பாக தனது 200ஆவது போட்டியில் மெஸ்ஸி விளையாடினார்.

போட்டியின் 17, 60, 76ஆவது நிமிடங்களில் கோல்களை அடித்தார். 5ஆவது நிமிடத்தில் இவர் அடித்த மற்றொரு கோல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டதால், அந்த கோல் நழுவியது.

ஆறு உலகக்கோப்பைகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். மேலும், ஜெர்மனியின் முன்னாள் முன்கள வீரரான மிரோஸ்லாவ் குளோஸின் 16 கோல்கள் என்ற எண்ணிக்கைக்கு நிகரான கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி.

இப்போட்டியில், அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com