69ஆவது பிறந்தநாள் - பிரபாகரன் வீட்டுமுன் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட்டம்!

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு.
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு. படம்- நன்றி: மதி முகநூல் பக்கம்
Published on

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 69ஆவது பிறந்த நாளான இன்று, அவருடைய ஆதரவாளர்கள் பல நாடுகளிலும் கொண்டாடியுள்ளனர்.

தலைநகர் சென்னையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் கொண்டாடப்பட்டது.

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டின் முன்பாக கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடினர். இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபாகரனின் தாயாருக்கு இறுதிக்கிரியைகளை முன்னின்று செய்தவருமான ம.க. சிவாஜிலிங்கம் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

இலங்கைப் படையால் இடித்துத் தள்ளப்பட்ட பிரபாகரனின் பூர்வீக வீட்டின் எஞ்சியுள்ள சுவரின் முன்பாக, அவரின் பிறந்த நாளைக் குறிப்பிடும்படியாக 69 என்ற எண்ணைக் கொண்ட கேக் வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் கேக்கை வெட்டி அங்குள்ள குழந்தைகளுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் ஊட்டினர். ஊர்ப் பொதுமக்களுக்கு கேக், இனிப்புகளையும் அவர்கள் வழங்கினர்.

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு.
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு. படம்- நன்றி: மதி முகநூல் பக்கம்
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு.
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு. படம்- நன்றி: மதி முகநூல் பக்கம்
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு.
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பங்கேற்பு. படம்- நன்றி: மதி முகநூல் பக்கம்
logo
Andhimazhai
www.andhimazhai.com