மலேசிய விமான விபத்து
மலேசிய விமான விபத்து

10 பேரை பலிகொண்ட மலேசிய விமான விபத்து; கருப்புப் பெட்டி மீட்பு!

மலேசிய விமான விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் வடக்கு ரிசார்ட் தீவான லங்காவியில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட ஒரு சிறிய ரக விமானம், தலைநகர் கோலாலம்பூருக்கு மேற்கே உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த ஆறு பயணிகள், இரண்டு விமான ஊழியர்கள் என 8 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

விமானம் சாலையில் விழுந்ததால் அவ்வழியாகச் சென்ற இரு வாகன ஓட்டிகள் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பத்து பேரின் உடல்களும், விமானத்தின் கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com