தாய்ப்பால் – இழிவு செய்தவன் பிழிந்தெடுப்பு!
வயநாடு நிலச்சரிவில் தாயை இழந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்த இளம் பெண்ணை இழிவுபடுத்திய நபரை பொதுமக்கள் தேடிக் கண்டுபிடித்து கையை உடைத்த சம்பவம் வைலராகி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கு மாவட்டத்தில் உள்ள உப்புதாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சஜின் பராகரா. இவருடைய மனைவி பாவனா. இவர்களுக்கு 2 இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஓட்டுநரான சஜின் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், “வயநாடு நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் யாராவது நிவாரண முகாம்களில் இருந்தால், அந்தக் குழந்தைகளை பராமரிக்கவும், தாய்ப்பால் கொடுத்து பாதுகாக்கவும் தயாராக உள்ளோம். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தேவைப்பட்டால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட என் மனைவி தயாராக உள்ளார்." என மொபைல் எண்ணுடன் பகிர்ந்திருந்தார்.
இந்த தம்பதியினரின் செயலுக்கு செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சஜினின் பதிவில் கமெண்ட் போட்டிருந்த விஜய் மயில்பீலி என்ற நபர், “அவள் தன் கணவனுக்கு முலைப்பால் கொடுக்க மாட்டாள் போலும்…"என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்துக் கோபமடைந்த பொதுமக்கள், விஜய் மயில்பீலியை தேடிப் பிடித்து சரமாரியாக அடித்து அவரின் கையும் உடைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.