யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய மாவீரர் வீரவணக்கம்!
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய மாவீரர் வீரவணக்கம்!படம்- நன்றி: மாலை முரசு, இலங்கை

மாவீரர் வாரம் - யாழ். பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

இலங்கையில் தமிழீழத் தனி நாட்டுக்கான போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த தமிழ்ப் போராளிகளின் நினைவாக நவம்பர் 21ஆம் தேதி முதல் மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் 27ஆம் தேதியன்று மாவீரர் நாளாகப் பின்பற்றப்பட்டு அன்று அதிமுக்கியமான நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் மாவீரர் வாரம் தொடங்கியதை முன்னிட்டு இன்று வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபிப் பகுதியில் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. முன்னதாக, தூபியையும் அதையொட்டிய பகுதியையும் தூய்மைப்படுத்திய மாணவர்கள், வண்ணமடித்து சிவப்பும் மஞ்சளும் கலந்த கொடிகளையும் தோரணமாகக் கட்டினர். வழக்கமான மரபுப்படி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com