ஆசிய விளையாட்டுப் போட்டி - ஹாட்ரிக் பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்!

Hattrick medals won by Indian players
ஹாட்ரிக் பதக்கங்களை வென்ற குல்வீர் சிங் - நீரு தண்டா
Published on: 

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

துப்பாக்கி சுடுதல்:

மகளிருக்கான தனிநபர் டிராப் துப்பாக்கி சுடுதலில், இந்திய வீராங்கனை நீரு தண்டா தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் நீரு தண்டா, கைனன் செனாய் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

கடந்த இரண்டு நாள்களில், நீரு தண்டா தனது மூன்றாவது பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

குத்துச்சண்டை:

ஆடவருக்கான 90க்கும் அதிகமான எடைப்பிரிவில், இந்திய வீரர் நரேந்தர் பர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

தடகளம்:

இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் 5,000 மீட்டர் தடகளப் போட்டியில் 13 நிமிடங்கள் 32.75 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற 10,000 மீட்டர், 1,500 மீட்டர் தடகளப்போட்டிகளிலும், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில், மூன்று பதக்கங்கள் வென்று ஹாட்ரிக் சாதனைப் படைத்துள்ளார்.

மகளிருக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் கிரண், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி, தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

உயரம் தாண்டுதல்:

மகளிருக்கான உயரம் தாண்டுதலில், 19 வயதான இந்திய தடகள வீராங்கனை பூஜா சிங் 1.84 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

வில்வித்தை:

வில்வித்தை போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் அணியினர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற சாஹில் ஜாதவ், சிகிதா தனிபார்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

பதக்கப்பட்டியலில் இந்திய அணி:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 9 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலப் பதக்கம் வென்று மொத்தமாக 57 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப்பட்டியலில் இந்திய அணி 8ஆம் இடத்தை பிடித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com