தொடர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்தும் மெக்சிகோ அணி!

Mexico team
மெக்சிகோ அணி
Published on

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் போஸ்னியா – ஹெர்சகோவினா, கத்தார் அணிகள் மோதின. இதில் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் கத்தார் அணியை போஸ்னியா – ஹெர்சகோவினா அணி வீழ்த்தி வென்றது.

குரூப் ‘பி’ பிரிவில் கனடா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி போட்டியை வென்றது.

குரூப் ‘சி’ பிரிவுகளுக்கு இடையேயான அணிகளில் மொராக்கோ, ஹைதி அணிகள் விளையாடின. போட்டியின் தொடக்கத்தில் ஹைதி அணி முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து மொராக்கோ அணியும் கோல் அடித்ததால் போட்டி விறுவிறுப்பானது.

மொராக்கோ அணி ஏற்கனவே ஒரு கோல் அடித்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்தில் 3 கோல்களை அடித்தது. இதனால், இந்த போட்டியின் முடிவில் 4-2 என்ற புள்ளி கணக்கில் ஹைதியை வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றியைத் தட்டிச் சென்றது.

அடுத்ததாக 'சி' பிரிவு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பிரேசில்,ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இதில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் பிரேசில் அணி போட்டியை வென்றது.

குரூப் ‘ஏ’ பிரிவில் தென்கொரியா – தென்ஆப்பிரிக்கா, செக் குடியரசு – மெக்சிகோ அணிகள் மோதின.

இதில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தென்ஆப்பிரிக்கா அணி, தென்கொரியா அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

செக் குடியரசு, மெக்சிகோ அணிகளுக்கு இடையேயானப் போட்டியில் மெக்சிகோ அணி தனது முழு ஆதிக்கத்தையும் செலுத்தி, 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மெக்சிகோ அணி போட்டியை வென்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com