
ஐ.நா. முன்னாள் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த தமிழர் மரபைச் சேர்ந்தவரான இவர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிப் போராட்டத்தின்போது ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையத்தில் பொறுப்பில் இருந்தார்.
இலங்கைக்கு சிறப்பு அறிக்கையாளரையும் தானே நேரடியாகப் பயணம் செய்தும் இனப்படுகொலை தொடர்பான விவரங்களை அறிந்தார்.
போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு இலங்கைக்குச் சென்று மக்களிடம் பேசி உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.
அப்போதைய இலங்கை அரசின் நிலைமையையும் கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக, வழக்கறிஞராகப் பணியாற்றிய நவநீ, ருவாண்டா இனப்படுகொலைக்கான நீதி தொடர்பாகவும் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளார்.
தமிழ் மரபைச் சேர்ந்த ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.