‘இதய நோய், புற்றுநோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது’

‘இதய நோய், புற்றுநோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது’
Published on

சர்க்கரை நோய், இதயநோய், சுவாசக்கோளாறு, புற்றுநோய், உடல்பருமன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விசா விண்ணப்பங்களை ஏற்க கூடாது என உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பணி அமெரிக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதனால் அவர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் மக்களை தடுக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.

இதன் அடுத்தக்கட்டமாக அதிபர் டிரம்பின் நிர்வாகம் இன்னொரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் உலகம் முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் உடல்நல குறைபாடு உள்ளவர்களின் விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க கூடாது. அவர்களின் விசா விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில், ’சர்க்கரை நோய், இதயநோய், சுவாசக்கோளாறு, புற்றுநோய், வளர்சிதை மாற்ற நோய், ,நரம்பியல் நோய்கள், மனநல நிலைமைகள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விசா விண்ணப்பங்களை ஏற்க கூடாது. இவர்களின் விசா விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். நோய் பாதிப்புடன் அமெரிக்கா வருவோரால் நம் நாட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த நடைமுறையை பின்பற்றி விசாவிற்கு விண்ணப்பம் செய்வோரின் உடல்நலனை ஆராய்ந்து அனுமதி என்பது வழங்கப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் பலரும் சர்க்கரை நோய், உடல் பருமன், இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com