வேதியியலுக்கான நோபல்  பரிசு பெறும் விஞ்ஞானிகள்
வேதியியலுக்கான நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள்Office

வேதியியல் நோபல் பரிசைக் கூட்டாக வென்ற 3 அமெரிக்கர்கள்!

நடப்பு ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பில், நடப்பாண்டுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மௌங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் அறிவிக்கப்படவுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com