பாகிஸ்தானின் டிரோன்களை வீழ்த்திய இந்திய ராணுவம்!

பாகிஸ்தானின் டிரோன்களை வீழ்த்தி வரும் இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் டிரோன்களை வீழ்த்தி வரும் இந்திய ராணுவம்
Published on

இந்தியாவின் ராணுவத் தளங்களையும், பொதுமக்கள் வாழும் இடங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை இந்தியா வீழ்த்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 26 நகரங்களைக் குறிவைத்து டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான்.

ஜம்மு, சம்பா, ராஜௌரி, பதான்கோட், அமிர்தசரஸ், ஜெய்சல்மர், பார்மர், பொக்ரான் ஆகிய பகுதிகளின் மேல் பல டிரோன்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதிகளான குப்வாரா, பூஞ்ச், யூரி, நௌகாம், ஹந்த்வாரா ஆகிய பகுதிகளில் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றன.

பஞ்சாப்பில் உள்ள பெரோஜ்பூரில் டிரோன் மூலம் ஏவப்பட்ட ஆயுதம் தாக்கியதில் ஒரு குடும்பத்தினர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடுமையான பதில் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை சுட்டு வீழ்த்திவருகிறது.

இந்தப் பதற்ற நிலையின் காரணமாக எல்லைப் பகுதி பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும், அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com