பிளிங்கிட்டில் மட்டும் கிடைக்கும் 'டிராமிசு மெலோடி'... என்ன சிறப்பு?

Tiramisu melody
டிராமிசு மெலோடி
Published on

சர்வதேச நண்பர்கள் தினமான நேற்று, பார்லே நிறுவனம் லிமிடெட் எடிஷனில், 'டிராமிசு மெலோடியை' அறிமுகம் செய்துள்ளது.

இதன் அட்டையில், 'இந்தியா - இத்தாலியின் நட்புறவைக் கொண்டாடுகிறோம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த சாக்லேட் 180 கிராம் எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பார்லே நிறுவனத்தின் நிர்வாகி கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டு, மே மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை அரசுமுறையாகச் சந்திக்கச் சென்றபோது, இந்தியாவிலிருந்து பரிசாக மெலோடி சாக்லேட்டை கொண்டுசென்றார்.

அதை, இத்தாலிய பிரதமர் மெலோனி தனது இன்ஸ்டாகிராமில், "பிரதமர் மோடி எனக்கு மிகவும் பிடித்த மெலடி டாஃபியை பரிசாகக் கொண்டுவந்துள்ளார்." என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவர்கள் இருவரின் பெயர்களை இணைத்து 'மெலோடி' என்று இணையத்தில் வைரலானநிலையில், சி.ஓ.பி.28 மாநாட்டின்போது இருவரும் எடுத்த செல்ஃபியை இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதிவிட்டார்.

இதனால், இந்த 'மெலோடி' சொல், சாக்லேட் இரண்டும் பிரபலமாகின.

இந்த நட்புறவை நினைவுகூரும் வகையில், பார்லே இந்தத் தயாரிப்பை நண்பர்கள் தினத்தில் அறிமுகம் செய்துள்ளது.

Tiramisu melody
டிராமிசு மெலோடி

இத்தாலியின் பரிச்சயமான ஏற்றுமதி பொருளான டிராமிசுவை தேர்ந்தெடுத்து, இத்தாலி உடனான நட்புறவை பறைசாற்றும் வகையில் பார்லே நிறுவனம், இதை தயாரித்துள்ளது.

காபி தூள், மஸ்கார்போன் சீஸ் கொண்டு, இந்த டிராமிசு தயாரிக்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com