அடுத்தடுத்து பேரழிவுகளை சந்திக்கும் பிலிப்பைன்ஸ்... கல்மேகி புயலால் 66 பேர் பலி!

கல்மேகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ்
கல்மேகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ்
Published on

பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் காரணமாக இதுவரை 66 உயிரிழுந்திருப்பதாக கூறப்படுகிறது. புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை நேற்று கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, அந்நாட்டின் சிபு தீவில் உள்ள நகரங்கள் மீது சூறாவளி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையும் கொட்டித்தீர்த்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கி க்கிய கல்மேகி புயலால் இதுவரை 66 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 26 பேர் காணாமல் போனதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப்பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பிலிப்பைன்சில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது கல்மேகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்த இயற்கை பேரிடர்களால் பிலிப்பைன்ஸ் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com