பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் – டிரம்ப் சர்ச்சை பேச்சு!

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்
Published on

இந்திய பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டுல் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், “அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன. நான் மத்தியஸ்தம் செய்தபோது அவர்கள் இருவருமே நாங்கள் போரை தொடர்வோம் என்றனர். இருவருமே வலுவானவர்கள். பிரதமர் மோடி மிகவும் நல்லவர். ஆனால் அவர் ரொம்ப கெடுபிடியானவரும் கூட. அவர் ஒரு கொலைகாரர். போரை நாங்கள் தொடர்வோம் என்றார். நான் மோடியிடம் நீங்கள் போரைத் தொடர்ந்தால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்றேன். பின்னர் பாகிஸ்தான் அரசிடமும் அதையேச் சொன்னேன். பின்னர் அவர்களே என்னை அழைத்து போரை நிறுத்துவதாகச் சொன்னார்கள்.

நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருகிறேன். எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் இருக்கிறது. எங்களுக்குள் நல் உறவும் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமரும், ஃபீல்டு மார்ஷலும் சிறந்த போராளிகள். ” என்றார்.

இந்தியா - பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாகக் கூறியதால்தான், இருநாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இருப்பினும், டிரம்ப்பின் கூற்றை மத்திய அரசும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com