கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்தவாரம் சுவாசத் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நுரையீரலில் பல்நுண்ணுயிர் தொற்று காரணமாக நிமோனியா உருவாகி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
88 வயதாகும் போப், பாக்டீரியா, வைரஸ்ம் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகளின் கலவையான தொற்றால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயதான நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இப்படி பல் நுண்ணுயிர் தொற்று ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
போப்பாக தேர்வான கடந்த 12 ஆண்டுகளில் அவர் பலமுறை நோய்வாய்ப்பட்டுள்ளார். அர்ஜெண்டினாவில் இருந்தபோது அவரது 21 வயதிலேயே நுரையீரலில் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுவாசக்கோளாறுகளால் அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நலம் குன்றி இருந்தாலும் நல்ல திடமான மனநிலையில் அவர் இருப்பதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.