பிரிட்டன், ஐல்வொர்த் நீதிமன்றத்தில் பிணையில் வந்த பெண் சிறை அதிகாரி
பிரிட்டன், ஐல்வொர்த் நீதிமன்றத்தில் பிணையில் வந்த பெண் சிறை அதிகாரி

கைதியுடன் சிறையில்... சிக்கிய பெண் அதிகாரி!

பெண்களுக்கு காவல்துறை, சிறைத் துறைசார்ந்த பிரச்னைகளை பரவலாகக் கேள்விப்பட்டிருக்க முடியும். பிரிட்டனில் சிறை ஒன்றின் பெண் அதிகாரி, ஆண் கைதியுடன் பாலுறவுகொண்ட காணொலி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தென்மேற்கு லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காணொலியில் இடம்பெற்றுள்ள பெண் அதிகாரியுடன் இருக்கும் கைதியின் சக கைதி ஒருவரே இந்தக் காணொலியைப் பதிவுசெய்துள்ளார்.

காணொலி சமூக ஊடகங்களில் வெளியானதும் சிறைத் துறை காவல்துறைக்கு முறைப்படி புகார் அளித்தது. அதன்படி சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியான 30 வயது லிண்டா டிசௌசா ஏப்ரோ கைதுசெய்யப்பட்டார். காவல்துறையினர் அவரை விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

சம்பவம் கடந்த மாதம் 26- 28 தேதிகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

விவகாரம் கசிந்ததும் கடந்த வெள்ளியன்று காவல்துறை வழக்குப் பதிந்தனர். மறுநாள் அவர் ஹீத்ரு விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அங்கிருந்து மேட்ரிட்டுக்குச் செல்லவிருந்தார். அதை முன்கூட்டியே சிறைத் துறைக்குத் தெரிவித்துமிருந்தார்.

ஐல்வொர்த் கிரௌன் நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தப்பட்ட அவருக்கு, பிணை வழங்கப்பட்டது. வரும் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com