யெவ்ஜெனி பிரிகோசின்
யெவ்ஜெனி பிரிகோசின்

வாக்னர் படை தலைவர் பிரிகோசின் சாவு; வாய்திறக்காத புதின்!

வாக்னர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின் உயிரிழப்பு குறித்து ரஷ்ய அதிபர் புதின் மௌனம் காத்து வருகிறார்.

வாக்னர் குழு ரஷ்யாவில் இயங்கிவந்த தனியார் ராணுவம் ஆகும். உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யா வாக்னர் குழுவைப் பயன்படுத்தியது. இந்நிலையில், உக்ரைனுடனான போரில் ரஷ்யா தங்கள் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது.

ரஷ்ய அரசுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக, கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின் 5 ஆயிரம் படைவீரர்களுடன் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்றார். இது ரஷ்ய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்னர் குழுவின் அணிவகுப்பு ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அன்றைய தினமே வாக்னர் குழுவுடன் ரஷ்யத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால், வாக்னர் குழுவின் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட்- 23), யெவ்ஜெனி ப்ரிகோஷின் தனது குழுவினருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பத்து பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் பட்டியலில் யெவ்ஜெனி பெயர் இருந்தாலும், ரஷ்யா இன்னும் அதை உறுதிசெய்யவில்லை.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், யெவ்ஜெனி திறமையானவர் தான் என்றாலும் அவர் தவறுகள் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் உக்ரைனுக்கு எதிரான போரில் வாக்னரின் பங்களிப்பு முக்கியமானது என்ற புதின், யெவ்ஜெனி உயிரிழப்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக, யெவ்ஜெனி ப்ரிகோஷினை ரஷ்ய அரவு பழிவாங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com