உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமையைப் பெற்ற உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஓட்ட உலக சாதனையை சீனாவின் மனித உருவ ரோபோ ஒன்று முறியடித்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு நடைபெறுகின்றன.
இந்தப் போட்டியில், 'டியான்கோங்க் அல்ட்ரா' என்ற ரோபோ 100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளிலேயே கடந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் 9.58 விநாடிகளில் 100 மீட்டரைக் கடந்தார். 'டியான்கோங்க் அல்ட்ரா' என்ற ரோபோ 0.19 விநாடிகள் வித்தியாசத்தில் 100 மீட்டரைக் கடந்து, இவரின் உலக சாதனையை முறியடித்துள்ளது.
இந்தப் போட்டியில் மற்றொரு சீன ரோபோவான லைட்னிங் 9.47 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே 100 மீட்டர் போட்டியில் 'டியான்கோங்க் அல்ட்ரா' என்ற ரோபோ, 21.50 விநாடிகளில் ஓடிய நிலையில், தற்போது 9.39 விநாடிகளுக்குள் பந்தயத்தை நிறைவுசெய்துள்ளது.