டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, சர்வதேச அளவில் தேடும் குற்றவாளியாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலக அளவில் கோடிக்கணக்கானோர் டெலிகிராம் செயலியைத் தகவல்தொடர்புக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
டெலிகிராம் செயலி மீது தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில்,தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டு இந்தச் செயலிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக, தேர்வு முடியும்வரை தற்காலிகமாக டெலிகிராம் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
தற்போது, டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் மீது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பான எஃப்.எஸ்.பி. அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.
டெலிகிராம் செயலியில் உள்ள மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை, பயங்கரவாத அமைப்புகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்றவும், ஒருங்கிணைக்கவும் பயன்படுத்துவதாக ரஷ்யாவின் உளவு அமைப்பு கூறியுள்ளது.
இதன் அடிப்படையில், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவித்துள்ளது.