தேங்காய்த் துருவலில் சால்மோனெல்லா கிருமி!
தென்னை அதிகமாகக் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் தேங்காயை உடைத்தவுடன் பயன்படுத்துவதே வழக்கம். சொந்த நாட்டு உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழகியவர்கள் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த பிறகும் இதே உணவுகளை விடுவதில்லை.
இப்படிப்பட்டவர்களுக்காக தேங்காய்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பதனப்படுத்தி நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தும் வகையில் தயார்செய்யப்படுகிறது. தேங்காய்த் துருவலைப் பொறுத்தவரை அது நன்றாக உறையவைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
கனடாவில், கியூபெக் மாகாணத்தில் இப்படி துருவி உறையவைக்கப்பட்ட தேங்காயில் சால்மோனெல்லா எனும் கிருமி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர்வரை பயன்படுத்தக்கூடியது எனக் குறிப்பிடப்பட்டுள்ள- யேன் ஓசேன் ஸ்வாலோ (Yen Ocean Swallow) எனும் பிராண்டின் 400 கி. பாக்கெட்டுகளிலேயே இந்தக் கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என கனடிய உணவுப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.