உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா வெற்றி!

இரண்டாம் நாள் - உலகக்கோப்பை கால்பந்து
இரண்டாம் நாள் - உலகக்கோப்பை கால்பந்து
Published on

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இரண்டாவது நாளில் டொரண்டோவில் கனடா-போஸ்னியா அணிகள், லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்கா-பாராகுவே அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. மற்றொரு போட்டியில் அமெரிக்க அணி வெற்றியை ஈட்டியது.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா - போஸ்னியா அணிகள் மோதிய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் போஸ்னியா வீரர் ஜோவோ லுகி முதல் கோலை பதிவுசெய்தார். இதனால் முதல் பாதி முடிவில் போஸ்னியா முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் கனடாவின் செலி லரின் ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இப்போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கொடுக்கப்பட்டது.

இதனால் குரூப் பி பிரிவில் கனடா அணி முதலிடத்தையும், போஸ்னியா அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

குரூப் டி பிரிவில் போட்டியிட்ட அமெரிக்கா-பராகுவே இடையிலான போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே அமெரிக்கா முன்னிலை வகித்துவந்தது. ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் டாமியன் போபாடில்லா கோல் அடித்து அமெரிக்காவை முன்னிலைக்குக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க வீரர் போலரின் பலோகன் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதியில் மற்றொரு கோல் அடித்து போலரின் பலோகன் தனது இரட்டை கோலைப் போட்டார்.

இதனால் முதல் பாதி ஆட்டத்தில் அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் பராகுவேவின் மௌரிசியோ கோல் அடித்து தங்கள் அணிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார்.

2-ம் பாதி முடிவதற்கு முன்னர், அமெரிக்காவின் ஜியோவானி ரெய்னா கோல் அடித்து அவரின் அணியை  4-1 என்ற புள்ளி கணக்கிற்குக் கொண்டுவந்தார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்க அணி, இப்போட்டியில் வெற்றி பெற்றதுடன் 3 புள்ளிகளுடன் குரூப் டி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com