சோயிக் மாலிக் - சனா ஜாவித்
சோயிக் மாலிக் - சனா ஜாவித்

விவாகரத்துக் கொடுத்த சானியா: நடிகையை மணந்த சோயிப் மாலிக்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிக் மாலிக் சனா ஜாவித் என்ற நடிகையை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். சோயிப் மாலிக்கிற்கு 2002ஆம் ஆண்டு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து பெற்று சானியா மிர்சாவை இரண்டாவதாக திருமணம் செய்தார். சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே, சானியா மிர்சாவுக்கும், சோயிப் மாலிக்கிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சானியா மிர்சா தொடர்பான பதிவுகளை நீக்கினார். இதனால், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகின.

சானியா மிர்சா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இஸ்டாகிராம் பக்கத்தில், விவாகரத்து தொடர்பாக பதிவு ஒன்று எழுதியிருந்தார்.

இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவிதை திருமணம் செய்துகொண்டார்.

கணவனை தன்னிச்சையாக விவாகரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக சானியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

திருமண புகைப்படத்தை சோயிப் மாலிக் தனது சமூக ஊடகத்தில் இன்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, ஆயிஷா, சானியா மிர்சா ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற சோயிப் மாலிக் தற்போது பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை 3ஆவதாக திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com