கடற்கரையில் துப்பாக்கிச்சூடு… 12 பேர் பலி; 29 பேர் படுகாயம்!

கடற்கரையில் துப்பாக்கிச்சூடு… 12 பேர் பலி; 29 பேர் படுகாயம்!
Published on

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியானதாகவும் 29 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. மேலும் 29 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. பலர் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

நியூ சௌத் வேல்ஸ் மாகாண போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் காவலில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களே என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com