ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி!

PM Modi got Slovakia's highest civilian award
ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி.
Published on

ஸ்லோவாக்கியா நாட்டிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ என்ற உயரிய விருதை வழங்கி அந்நாடு கவுரவித்துள்ளது.

இவ்விருது பிரதமர் மோடி பெறும் 33ஆவது சர்வதேச விருது ஆகும்.

ஸ்லோவாக்கியா நாட்டிற்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் இவர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகிய மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையேயான டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழிலாளர் இடப்பெயர்வு ஆகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:

"ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ என்ற விருதை வாங்குவதில் பெருமிதம் அடைகிறேன். ஸ்லோவாக்கியா நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சொந்தமாகும். ஸ்லோவாக்கியா, இந்தியா இடையிலான நீடித்த உறவுக்காக இந்த விருதை அர்பணிக்கிறேன். "என்று கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com