நேபாள வெள்ளம்... 8 பேர் பலி; 100+ தமிழர்கள் சிக்கித்தவிப்பு!

Flood in Nepal
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்
Published on

நேபாளத்தில் உள்ள வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள கோசி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், அங்கிருந்த குடியிருப்புகள், சாலைகளை சேதப்படுத்தியது.

வெள்ளத்தில் 11 நீர்மின் நிலையங்கள், 19 பாலங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.

இதில் குறைந்தபட்சம் 384 பயணிகள் சிக்கியிருக்கலாம் என்று நேபாளத்தின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. மேலும், 291 வெளிநாட்டவர், 93 நேபாளர்களை காணவில்லை என்றும், அவர்களில் 105 பேர் இந்தியர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பகோணம், சென்னையைச் சேர்ந்த சுற்றுலா ஏஜென்சி மூலம் தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலாச் சென்ற 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அதில் 20 பேர் மட்டுமே தங்களைத் தொடர்புகொண்டுள்ளதாக கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா சுற்றுலா ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதையடுத்து நேபாள அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது:

இந்தியாவுக்கான உதவி எண்: 1800 309 3793
வெளிநாடுகளுக்கான உதவி எண்கள்: +91 8069009901, 08069009901

கோசி, கண்டக், பாகமதி ஆகிய ஆற்றங்கரையோரம் இருக்கும் பீகார் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com