சுந்தர் பிச்சையின் கூகுள் தீபாவளி! வைரல் வாழ்த்து!

சுந்தர் பிச்சையின் கூகுள் தீபாவளி! வைரல் வாழ்த்து!
Published on

தீபாவளியைக் கொண்டாடும் விதத்தில் கூகுள் லோகோ வடிவ அமைப்பில் இனிப்புகளை அடுக்கி வைத்து சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ள படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களில் பர்பிகளை அடுக்கி வைத்து சுற்றிலும் விளக்குகளை எரியவிட்டு படம் வெளியிட்டார் அவர். ‘ எங்க வீட்டில் இது மாதிரிதான் பர்பிகளை அடுக்கி சர்வ் பண்ண முடியும்னு நினைக்கிறேன்’ எனவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.

ஜாலியான சி இ ஓ சார் நீங்க என சொல்லி அவருக்கு தீபாவளி வாழ்த்துகளை பல மொழிகளில் சொல்லிவருகிறார்கள். ‘வணக்கம்டா மாப்ள’ என்று ஒருவர் உரிமையுடன் சொல்ல இன்னொருவர் இது ஏஐ படம் என்றும் ’கண்டுபிடித்துப்’ போட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com