சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்த சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி மையத்தை அடைந்த சுனிதா வில்லியம்ஸ் நடனமாடி மகிழ்ச்சி!

சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக நேற்று முன்தினம் விண்வெளிக்குச் சென்றார். அவர் தன்னுடன் விநாயகர் சிலை மற்றும் பகவத் கீதையை கொண்டு சென்றுள்ளார்.

பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'-ன் 'ஸ்டார்லைனர்' விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றார். அவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் சென்றார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார்லைனர்' விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தநிலையில், 25 மணி நேர பயணத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக 3ஆவது முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணி அளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் சென்றனர். சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.

சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததுமே மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுனிதா வில்லியம்ஸ், அங்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com