உலகம்
20 மாணவர், 3 ஆசிரியர் உயிரிழப்பு... தாய்லாந்து விபத்தில் துயரம்!
தாய்லாந்து நாட்டில் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளானதில், தீப்பற்றி எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கின் புறநகர்ப் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து 23 உடல்களைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பேருந்தில் பயணம்செய்த மற 19 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
அவர்களில் காயமடைந்த 13 ஆசிரியர்களும் மூன்று ஆசிரியர்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இறந்துபோனவர்களில் 11 ஆண்கள், 7 பெண்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.