மெக்சிகோவிலும் புயலை கிளப்பிய ஜென் ஸீ தலைமுறையின் போராட்டம்... அதிர்ந்து போன அரசு!

மெக்சிகோ
மெக்சிகோ
Published on

மெக்சிகோவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை ஜென் ஸீ தலைமுறையினர் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.

இந்நிலையில், ஜென் ஸீ தலைமுறையினரின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோ நாடாளுமன்றம் மற்றும் அதிபர் கிளௌடியா ஷின்பாம் வீட்டையும் போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றனர்.

“கார்லோஸ் இறக்கவில்லை, அரசுதான் அவரைக் கொன்று விட்டது’’ என்று முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், ஊழல், வன்முறை, அதிகார துஷ்பிரயோகத்தால் சோர்வடைந்த மெக்சிகோ இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியதாகவும் கூறினர்.

இந்தப் போராட்டத்தின் காவல் அதிகாரிகள் 100 பேர் காயமடைந்த நிலையில், 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏற்கெனவே, வங்கதேசம்,நேபாளம் மடகாஸ்கர், மொரோக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜென் ஸீ தலைமுறையினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com