நாயாக மாறியுள்ள டோகோ
நாயாக மாறியுள்ள டோகோ

பல லட்சம் செலவழித்து நாயாக மாறிய ஜப்பானியர்!

ஜப்பானியர் ஒருவர் தன்னை நாயாக மாற்றிக் கொண்டிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த டோகோ என்பவருக்கு சிறு வயது முதலே நாய்கள் மீது தீராத காதல். நண்பர்களிடம் பேசும்போதெல்லாம், நாயாக பிறந்திருக்கலாம் என்று கூறுவாராம்.

திடீரென ஒரு நாள் நாயாகவே மாறி நண்பர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளார். இதற்காக அவர், சுமார் 11 லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கிறார். இவரை, தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய நிறுவனமான ஜெப்பெட் நாயாக மாற்றி உள்ளது. இவ்வாறு உருவாக்க 40 நாட்கள் ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோகோ கூலி வகை நாயாக மாறி உள்ள டோகோ, மற்றவர்கள் கொடுக்கும் போலி மரியாதையை விரும்பாததால், தனது மனித அடையாளத்தை மறைக்க விரும்பியதாகவும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

டோகோ, I want to be an animal என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சுமார் 30,000 சப்ஸ்கிரைப்பர்களை கொண்ட இந்த சேனலில், கூலியாக உள்ளபோது அவரின் அன்றாட வாழ்க்கை முறை, அவ்வப்போது செய்யும் குறும்புகள் உள்ளிட்டவற்றை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் யூடியூப் பிரபலமாகவும் மாறி உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com