நார்வே எழுத்தாளர் போசேவுக்கு இலக்கிய நோபல் விருது!

நார்வே எழுத்தாளர் போசேவுக்கு இலக்கிய நோபல் விருது!

நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் யோ போசேவுக்கு நடப்பு ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேசப்படாத தரப்புகளுக்காகக் குரல் எழுப்பும் அவரின் புதுமையான நாடகங்களுக்காகவும் உரைநடைக்காகவும் விருது வழங்கப்படுகிறது என நோபல் பரிசை வழங்கும் சுவீடீஷ் அகாதமி குறிப்பிட்டுள்ளது.

”நார்வே நாட்டின் நார்ஸ்க் மொழி வழக்கில் போசே தீவிரமாக எழுதியுள்ளார். நாடகங்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், குழந்தைகள் புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் என பலவகையான பரந்த அளவிலான எழுத்துகளை அவர் படைத்துள்ளார்.” என்று நோபல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறந்த நாடகங்களை எழுதுவோரில் ஒருவராக அறியப்படும் போசே, அவருடைய கட்டுரைகளுக்காகவும் பேசப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துக்கான பரிசைத் தொடர்ந்து நாளை வெள்ளியன்று பிற்பகல் 2.30 மணிக்கு அமைதிக்கான பரிசும், வரும் திங்களன்று பிற்பகல் 3.15 மணிக்கு பொருளாதார அறிவியலுக்கான பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com